ஃபேஸ்புக்கின் தகவல் பரிமாற்ற ஆப்லிகேசன்களை ஒன்றாக இணைக்கும் பணிகள் மாதங்களாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இத்திட்டம் செயல்வடிவம் கிடைத்தால் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய பயனாளர்கள் இலகுவாக செய்திகளை பரிமாற்றிகொள்ளலாம்.
எதிர் போட்டி நிறுவனங்களை சமாளிக்க தனது பயனாளர்களை ஒரே வரிசையின் கீழ் கொண்டுவரும் ஃபேஸ்புக், இதன்மூலம் விளம்பர வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயனாளர்களை ஒரே வரிசையின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைக்கு அந்நிறுவனத்திற்குள் எதிர்ப்புகள் எழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பர்க் என்பதால் எதிர்ப்புகளையும் மீறி இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த 3 ஆப்களை இணைப்பதால் பாதுகாப்பு விவரங்களுக்கு கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க் ஸக்கர்பர்க் வலியுறுத்திக்கூறியதாக தெரிகிறது. End-to-end encryption முறை மேலும் வலுவாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment