உலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திரா நூயி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.189 நாடுகளை அங்கமாக கொண்டுள்ள உலக வங்கியின் தலைவரான ஜிம் யாங் கிம், இம்மாத இறுதியுடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, உலக வங்கியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. புதிய தலைவராக அதிபர் ட்ரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியான நிலையில், அதனை உலக வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில், புதிய தலைவர் பொறுப்புக்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 63 வயதான இந்திரா நூயி, சென்னையில் பிறந்து பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment