சிரியாவில் இரத்த தாகத்தை தணித்துவிட்டு நாடு திரும்பும் அமெரிக்க ராணுவம்

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறத் தொடங்கியுள்ளன. 

ஐஎஸ் அமைப்பினரை கட்டுப்படுத்த அமெரிக்கப் படைகள் சிரியாவில் முகாமிட்டிருந்தன. இதுவரை நடைபெற்ற போரில், அமெரிக்க, ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில்பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டன. 
இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதால் சிரியாவில் உள்ள அமெரிக்க வீரர்கள் திருப்பி அழைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் கடந்த மாதம் கூறியிருந்தார். ட்ரம்ப் அறிவித்த மறுநாளும் அங்கு பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த சூழல் எந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தலாம் என குழம்பிய ஊடகங்கள் மீண்டும் அல்கய்தாவின் பெயரை பயன்படுத்தி வருகின்றன. உசாமா கொல்லப்பட்ட போது அல்கய்தா முழுவதும் அழிக்கப்பட்டதாக சொன்னதும் இதே வல்லரசுகளும், அவர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளும் தான் என்பது கூடுதல் தகவல்.

சரி விசயத்திற்கு வருவோம். ட்ரம்பின் அறுவிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஈராக் எல்லையோரம் முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் தாயகம் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் முகாமிட்டுள்ள 2 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் அடுத்த மாதத்திற்குள் நாடு திரும்புவதாக கூறப்படுகிறது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget