எடப்பாடி பழனிசாமி சத்தமாகப் பேசினால் அது அனைத்தும் பொய்யாகத்தான் இருக்கும் என விமர்சனம் செய்தார் தினகரன். அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு சுயட்சை வேட்பாளரான நான் வெற்றிபெற்றது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதில் நமது வேட்பாளர் காமராஜை போட்டியிட வைத்து வெற்றிபெற்றுவிடலாம் என நினைத்த நேரத்தில், தி.மு.க தேர்தலை நிறுத்த பல வேலைகளைச் செய்தது.
பல கட்சிகளைக் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க என்னுடன் போட்டியிட பயப்படுகிறது. எடப்பாடி அரசு எந்த மூலைக்கு அவர்கள் வெறும் வெற்றுவேட்டு. முன்பு எம்.பி-க்களுக்கு ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவுகள் வரும். தற்போது மோடியிடமிருந்து வருகிறது. இவர்கள் கூட்டணி இல்லை என்றால் இவர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசுபோல படபடவென வெளியே வரும்.

Post a Comment