கொடநாடு கொலைகள் - "முதலமைச்சர் பதவி விலக வேண்டும்"


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து கொடநாடு பங்களாவில் காவலாளி, சிசிடிவி ஆப்பரேட்டர், ஓட்டுனர், சயனின் மனைவி, குழந்தை ஆகிய 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்தியூஸ் கூறியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், குற்றச்சாட்டு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். கொடநாடு கொலைகள் தொடர்பாக விசாரணை குழு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க திமுக நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget