உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள், ராகுல் மற்றும் சோனியா காந்தியின் தொகுதிகளில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு 3 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், நாடு முழுவதும் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் தலா 38 தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் வேலை வாய்ப்பு மற்றும் ஊழல்கள் பெருகியதால், கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என அகிலேஷூம், மாயாவதியும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ராகுல்காந்தியின் தொகுதியான ரேபரேலியிலும், சோனியா காந்தியின் அமேதி தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Post a Comment