ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் இருப்பதை கேள்விப்படுகிறது அந்த திருட்டு கும்பல். அதை திருட முயன்ற பலர் இப்போது சிறையில் உள்ளனர். எனவே அந்த வீட்டில் வேலையாட்களை போல் உள்ளே நுழைந்து அந்த வைரத்தை திருட திட்டம் தீட்டுகிறான் அந்த கும்பலின் தலைவன். அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது.
அவர்களின் அடுத்த திட்டம் வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதற்காக அவர்கள் அவ்வளவு விஸ்வாசமாக உழைக்க தொடங்குகின்றனர். 3 மாதங்கள் கடந்துவிட்டன. வீட்டில் உள்ளவர்கள் அந்த கும்பலை முழுமையாக நம்பிவிட்டனர். இந்த சூழலில் வைரம் இருக்கும் மறைவிடத்தை கண்டுபிடித்த அந்த கும்பல் அதை திருடிக்கொண்டு தப்பியோடுகிறது.
இந்த கதையை ஒரு உவமைதான். இதே போல் சில கட்சிகள் வளர்ச்சி, பாதுகாப்பு, தேசபக்தி, முன்னேற்றம், சுத்தம் என நல்லது செய்வது போல் ஆட்சியை பிடித்து மக்களின் அபிப்ராயத்தை பெற முயல்கிறார்கள். மக்களும் ஒருகட்டத்தில் அவர்களின் பாசாங்குகளை நம்ப தொடங்கும் சூழலில், தனது குறிக்கோளான பிரிவினைவாதத்தை, மதக்கலவரத்தை கையில் எடுக்கிறது அந்த கட்சி.
ஒரு கட்சி செய்யும் சிறிய சிறிய செயல்களை கண்டு அவர்களை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடாமல் அவர்களின் கொள்கையையும், அதன் பாதையில் அவர்கள் செல்கிறார்களா என்பதையும் உணர்ந்து ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மேலே நாம் சொன்ன உவமை போல் திருடன் கையில் கொத்துச்சாவியை கொடுத்த கதையாகிவிடும்.
Post a Comment