இந்திய பெரு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் பெறும் கடன்களை திரும்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் வங்கிகள் பொருளாதார சிக்கலில் தத்தளித்து வருகின்றன. இதனை சமாளிக்கும் வகையில், கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விரைவில் இணைக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 3 வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Post a Comment