PUBG விளையாட்டால் வந்த விபரீதம்

PUBG எனும் பிரபல மொபைல் கேம்- தங்களின் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அரிது. இதை அதிகமாக விளையாடி அடிமையாகுபவர்களை அதிகளவில் நாம் பார்த்துவருகிறோம்.

அதைபோலவே ஜம்மு காஸ்மிரில் அதிகமான நேரம் PUBG கேம் விளையாடிய உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் மனதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்

அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் PUBG கேம்- மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளார். முதல் நாளே அவருக்கு அந்த கேம் அதிகளவில் பிடித்துவிட்டதால், தொடர்ந்து ஆர்வமாக விளையாடிவுள்ளார்.
இவ்வாறு 10 நாட்களும் இடைவிடாமல் விளையாடியதால் அவர் மனம் சமநிலையை இழந்துள்ளது. ஓர் கட்டத்தில் அவர் எல்லை மீறி ஆர்வக்கோளாரில் தன்னை தானே அடித்து கொண்டுள்ளார். ஆகையால் அவர் சற்று மனதால் பாதிக்கப்பட்டுள்ளார் என அவருக்கு அளிக்கும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.


 தற்போது அவர் இயல்பான நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்

அதுமட்டுமல்லாமல் இதற்கு சிறுவர்கள் வேகமாக அடிமையாகி வருவதால் பலர் PUBG கேம்- கட்டாயமாக தடை செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget