கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே உள்ள விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யும்போது ஓடுபாதைக்கு முன்னர் அருகிலுள்ள கட்டிடங்களுக்குள் மோதியது.
ஈரானின் தலைநகரான கராஜ் அருகே உள்ள பேத் விமானநிலையத்தில் தவறுதலாக இறங்கிய, அது போயிங்க் 707 சரக்கு விமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கட்டுப்பாடை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுருக்கலாம் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. விபத்துள்ளான பகுதிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்துக்குள்ளானது ஈரான் விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமான என்றும், கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து புறப்பட்டு வந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யும் முன் கிர்கிஸ்தானிலுள்ள பிஷ்கெக் மனஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும், விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளார்.
Post a Comment