மதநல்லிணக்க கோட்டை அமீர் விருதை ரத்து செய்த தமிழக அரசு

-2016ம் ஆண்டு அபூபக்கர் என்பருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டை அமீர் விருது வழங்கி கவுரவித்தபோது.

மத நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர்களுக்க்கு கோட்டை அமீர் பெயரில் மத நல்லிணக்கப்பதக்கம் ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் வழங்கப்படுகிறது. அத்துடன் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

ஆனால் இந்த குடியரசு தின விழாவில் இந்த பதக்கத்தை வழங்காமல்  அ.தி.மு.க. அரசு புறக்கணித்துள்ளது. நாட்டில் மதக்கலவரங்கள் அதிகரித்து வரும் சூழலில் இது போன்ற விருதுகள் அவசியமானதாக உள்ளது. ஆனால், தமிழக அரசு மத்திய பாஜக அரசுக்கு பயந்து இந்த விருதை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக பொருளாளர் துரை முருகன், வருகின்ற தேர்தலில் அமையப்போகும் பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமாகவும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு பயந்தும் கோட்டை அமீர் பதக்கத்துக்கு இந்த வருடம் யாரையும் தேர்வு செய்யாமலும், அந்த பதக்கத்தை யாருக்கும் வழங்காமலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget