நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து உறுதியாக போட்டியிடும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
புதுசேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பா.ஜ.க-வும், அதிமுக-வும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறினார். மேலும், தினகரன் அதிமுகவோடு இணைய வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக தினகரனை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்றார்.
நியூசு பார்வை:
ராம்தாஸ் அத்வாலே பாஜக கட்சியை சேர்ந்தவர் கிடையாது. இந்திய குடியரசு கட்சியை நடத்தி வருகிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அமைச்சரானவர். இவரது கருத்து எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அது மட்டுமின்றி தம்பிதுரை பாஜகவை கடுமையாக சாடி வரும் நிலையில், அதிமுக பாஜகவை கழற்றிவிட்டு தேர்தலை சந்தித்தால் ஓரளவு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கும் என கருதுகிறது. ஒருவேளை தேர்தல் முடிவில் இழுபறி ஏற்பட்டால் அதிமுக தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பிடிக்க திட்டம் வகுத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கக் தெரிவிக்கின்றன.

Post a Comment