ஆண் வேடமணிந்து முடிதிருத்தம் செய்யும் சகோதரிகள்

தந்தைக்கு உடல் நிலை குன்றியதால் அவர் நடத்திய முடி திருத்தும் கடையை அவரது மகள்கள் ஆண்கள் போல் வேடமணிந்து நடத்தி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதி குமாரி, நேஹா ஆகிய 2 சகோதரிகளின் தந்தை சொந்தமாக முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டு குடும்பம் கடுமையான வறுமையில் தவித்தது. இந்த நிலையில், 2 சகோதரிகளும் தன் தந்தையின் முடிதிருத்தும் கடையை நடத்த தொடங்கினர். பெண்கள் என்பதால் அவர்களிடம் முடிதிருத்தம் செய்ய கிராம மக்கள் தயங்கினர். இதன் காரணமாக இருவரும் ஆண்களைப் போல் தங்கள் உடை, பாவனையும், பெயரையும் தீபக், ராஜு என்று மாற்றிக் கொண்டனர். இதனை தொடர்ந்து அந்த முடிதிருத்தம் செய்யும் கடைக்கு ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வருகை தர தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நாள் தோறும் 400 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget