சமூக வலைத்தங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியை உபயோகிக்காதவர்கள் அரிதே. இதன் வரிசையில் டிக் டாக் செயலியும் கூட. டிக் டாக்-ஐ உபயோகிப்பவர்கள் பலர் பிரமலமாக வேண்டுமென பெண்கள் ஆபாசமான முறையில் ஆடை அணிந்தும் ஆண்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தங்களது வீடியோவை பதிவிடுகிறார்கள். இதை பல சிறுவர்கள் பார்க்கக்கூடியதாக இருப்பதால், அவர்களை பாதிப்படைய செய்யகின்றன.
சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் கூட இருவர் இந்த டிக் டாக் செயலியால் விமர்சனம் செய்யபட்டு பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்துக்கொண்டனர்.
இந்த செயலி மூலம் ஆபாசமான முறையில் ஆடை அணிந்தும் ஆண்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதால் பார்க்க கூடியவர்களுக்கு முகச்சுழிக்க செய்கிறது. இதை தடுக்கும் வகையில் சீன அரசு இதைபோன்ற குறு வீடியோ செயலிகளுக்கு 100 கட்டுப்பாட்டுகளை வெளியிட்டுள்ளது.
அதில் ஆபாச உடைகள் அணிவது, ஆபாச பேச்சுகளை பேசுவது, மத வெறி மற்றும் சமூக வெறி தூண்டுவது போன்ற பல கட்டுப்பாட்டுகளை சீனா வெளியிட்டுள்ளது.
இதைபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவும் வதிக்கவேண்டும் என தொழில்நுட்ப ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment