மோடி வருகைக்கு எதிர்ப்பு: தெரிக்கவிடும் தமிழர்கள்

மதுரை தோப்புரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வர உள்ளார்.
மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை மதுரையில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மதுரையில் அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டு  5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 11:20 மணிக்கு மோடி மதுரை வருகிறார். மோடியின் வருகைக்காக மதுரையில் போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பெரியார் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.
அதன்படி தற்போது பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடந்து வருகிறது. மதுரை மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் தற்போது மதுரை முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மோடி வருகைக்காக 5 அடுக்கு பாதுகாப்பு உட்பட, அவர் விழாவில் பங்கேற்க சுமார் ஒன்றரை நேரம் அங்கு விமானம் பறக்க தடை விதிக்கப்படுத்துள்ளது.  மேலும் சுமார் 3ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget