கடந்த
பல மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து
உயர்த்தி வந்தன. இந்த நிலையில், மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல்
எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 120 ரூபாய் 50
காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள்
அறிவித்துள்ளன.
இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் சிலிண்டருக்கு 120 ரூபாய் குறைப்பு என வெளியிட்டு வருகின்றன. இதன் மூலம் மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பது அவர்களின் திட்டம். உண்மை என்னவெனில் பெரும்பாலான நடுத்தர, ஏழை மக்கள் மானியத்துடன் சிலிண்டர் பெற்று வருகின்றனர். அவற்றின் விலை ரூ.5.91 காசுகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. 4.5 ஆண்டுகள் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்த மத்திய அரசு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் விலை குறைப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் முட்டாளாக்கப்படுவது மக்கள் தான்.

Post a Comment