விளைநிலங்கள் மத்தியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அண்மையில் போராட்டம் நடத்தினர். 14 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், மின்துறை அமைச்சர் தங்கமணியுடன், விவசாயிகள் சங்க கூட்டியக்க நிர்வாகிகள் பேச்சுவார்ததை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கோயம்புத்தூர் திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். அப்போது பேசிய விவசாயிகள் சங்கத்தினர், முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

Post a Comment