காங்கிரஸ் தலைவர் ராகுல் அரசியல் மாநாடு மற்றும் துபாய் நாட்டின் தலைவர்களை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாய் நாட்டின் இளவரசரை சந்தித்து பேசிய ராகுல் மாலையில் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது குறித்து தினமலர் "துபாயில் 14 வயது சிறுமியிடம் அசிங்கபட்ட ராகுல்: நேரலையை நிறுத்திய பரிதாபம்" என்ற செய்தியை வெளியிட்டது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2190731
இதனை பாஜக, ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் பேஸ்புக் போராளிகள் அதிகம் பரப்பி வருகின்றனர். துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது குறித்து My Nation என்ற இணையதளம் வெளியிட்ட பொய்யான செய்தியை பகிர்ந்திருந்தார்.
அதில் தினமலர் கூறி இருப்பது என்னவென்றால், "துபாய் வாழ் இந்தியர்களிடையே பேசிய ராகுல் , இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை என்றும், பாஜ., அரசின் நடைமுறையினால் இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளதாகவும் கூறி மோடி மற்றும் இந்தியா குறித்த தனது கருத்தை மக்களிடம் எடுத்துவைத்தார்.
தனது பதில்களுக்கு இடையே பொதுமக்களை நோக்கி ஏதேனும் கேள்வி இருக்கிறதா என்று கேட்க நிறைய நபர்கள்முன்வந்த நிலையில் சிறுமியிடம் மைக்கை கொடுக்குமாறு ராகுல் சைகை காட்ட விழா ஏற்பாட்டாளர்கள் சிறுமியிடம் மைக்கை கொடுத்தனர்.
அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்த சிறுமி, ராகுலிடம் முதலில் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது… இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்று வந்தீர்கள் அதுவே காஷ்மீரில் நடந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள் ஏன் என்று கேட்க ஒரு நிமிடம் ராகுல் ஆடி போய்விட்டார்.
அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும் ,விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த கால ஆட்சியில் 80 % ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்களா என்றுகேட்க அவ்வளவுதான் ராகுலின் முகம் மாறிவிட்டது. அவரால் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்த படியே இருந்தார். இதனை எதிர்ப்பாரத காங்கிரஸ் ஐடி டீம் நேரலையை நிறுத்தியது.
மேலும் சிறுமி கூறியதாவது, இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் இனிமேலாவது தாங்களும் தங்கள் நண்பர்களும் மதவாதம் என்று சொல்லாமல் ஊழல் இல்லாத ஆட்சியை இனிமேலாவது தருவோம் என்று வாக்கு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பார்கள் என்று தெரிவிக்க அரங்கில் கை தட்டல் ஒலிக்க ஆரம்பித்தது.
ராகுலிடம் துணிவாக கேள்வி கேட்ட சிறுமியை பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர். இனி ராகுல் துபாய் பக்கம் செல்லவே நினைக்கமாட்டார் அடி அப்படி."
தினமலரில் வெளியான இந்த தகவலின் உண்மை குறித்து ஆராய நமது நியூசு குழு களமிறங்கியது. அதன் படி அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த நமது நண்பர்களிடம் விசாரித்ததில், இது போன்றதொரு கேள்வி பதில் நிகழ்ச்சியே நடைபெறவில்லை என்பது உறுதியானது. இருப்பினும் அந்த சிறுமியின் வீடியோ எங்கிருந்து வந்தது என்பது குறித்து இணையதளத்தில் தேடினோம். அப்போது, மும்பையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்தி பாக்வே என்ற மாணவி பேசிய படத்தை வெளியிட்டுள்ளது அம்பலமானது. "SAVE GIRL CHILD" என்ற பெயரில் Learn many skills என்ற யூடியூப் சேனல் 2016ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழ் என தற்புகழ்ச்சியடிக்கும் தினமலர் இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பி மக்களை குழப்பு இருகிறது.


Post a Comment