![]() |
| -file image |
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடநாடு விவகாரம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசியல் நெருக்கடி கொடுப்பதற்காகவே இதனை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தாங்கள் எதிர்ப்பதாகவும், நியாயம் எங்கள் பக்கம் இருப்பதாகவும் கூறிய ஓ.பி.எஸ், தொலைக்காட்சி மூலம் தவறான கருத்துகள் பரப்பப்பட்டுவது சட்டப்படி குற்றம் என எச்சரித்தார். ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Post a Comment