அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் குறிப்பிட்ட சாதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இவர்களுக்கு உறுதுணையாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 வழக்கறிஞர்களை கொண்ட ஆணையம் அமைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த ஆணையம் தொடர்பாக இன்று மாலைக்குள் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், நன்கொடைகள் குறித்து அந்த ஆணையமே முடிவெடுக்கும் என்றனர். அத்துடன் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

Post a Comment