மலேசிய மன்னராக பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது கடந்த ஜனவரி 6-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா முடிசூட்டிக்கொண்டார். மலேசியா அரண்மனையில் பிரதமர் மஹாதிர் முகமது முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மலேசியாவில் மன்னர்களின் வேலை என்ன?
மலேசியாவில் 9 மாநிலங்களில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர். அந்த வகையில், பஹாங் மாநிலத்தின் தலைவரான 59 வயது சுல்தான் அப்துல்லா, புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பிலும், உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபாவிலும் உறுப்பினராக உள்ளார். மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் சுல்தான் பொறுப்பு வகித்துள்ளார். மலேசிய மன்னர் மற்றும் அவரின் குடும்பத்தின் செலவுகளுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8.6 கோடியை ஒதுக்க அந்நாட்டு சட்டம் அனுமதி அளிக்கிறது. அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இத்தொகை இன்னும் மேலும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment