இந்தியாவில் நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் என கணிக்கும் அளவுக்கு உயர்வை சந்தித்தது. இதனை தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பெட்ரோல் விலை சரிவடைய தொடங்கியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை மறைமுகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில், இன்று 4-வது நாளாக உயர்த்தியுள்ளன. சென்னையில் நேற்றைய விலையைக் காட்டிலும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.53 காசுகள் உயர்ந்து ரூ.72.40க்கும், டீசல் ரூ.64 காசுகள் உயர்ந்து ரூ.67.26க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவுதி அரேபியா தனது தினசரி உற்பத்தியை 8 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment