ஜே.என்.யு வழக்கு - கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை

Kanhaiya Kumar, Umar Khalid Named as Delhi Police File 1,200-Page Chargesheet in JNU Sedition Case


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கூட்டம் நடத்திய கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.



நாடாளுமன்ற தாக்கல் வழக்கில் அப்சல் குரு மற்றும் மெக்பூல் பத் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து, கடந்த 2016ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேசத்துக்கு எதிராகவும், இந்திய ராணுவத்துக்கும் எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில்,போலீஸார் ஆயிரத்து 200 பக்கங்கள் கொண்ட இக்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். கன்னையா குமார்,  உமர் காலித் உள்ளிட்ட 10 பேர் இவ்வழக்கில் பிரதான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை டி.ராஜாவின் மகள் அபராஜிதா உள்ளிட்ட 36 பேர் இடம்பெற்றுள்ளன.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget