கரையை கடக்கும் பபுக் புயல்
தென் சீனக்கடலில் நிலைகொண்டிருந்த பபுக் புயல் வங்கிக்கடலுக்குள் புகுந்து அந்தமான் கடல் நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை அந்தமானுக்கு தென்கிழக்கே 720 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது நள்ளிரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர் வரை இருக்கும் எனவும், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Post a Comment