நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.
நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 66 ரன்கள் எடுத்தும், ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 43 ரன்கள் எடுத்தும், அம்பதி ராயுடு 47 ரன்கள் எடுத்தும் பெவிலியன் திரும்பினர்.
325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 166 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, டக் பிரேஸ்வெல் அதிரடியால் 200 ரன்களைக் கடந்தது. டக் பிரேஸ்வெல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த விக்கெட் கீப்பர் தோனி அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். கேதர் ஜாதவ் தனது பங்கிற்கு 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது.
இறுதியில், 40.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானதால், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

Post a Comment