ஒருநாள் போட்டியில் 10,000 ரன்கள் அடித்து தோனி சாதனை


இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தோனி ஒரு ரன்னை எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் எட்டினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் முடிவில் 9 ஆயிரத்து 999 ரன்களில் இருந்த தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க சிட்னி மைதானத்தில் தனது மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம், சர்வதேச அளவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 13-வது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். இந்திய அளவில் சச்சின், கங்குலி, டிராவிட், கோலி ஆகியோருக்கு அடுத்ததாக 10 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் எனும் பெருமையையும் தோனி பெற்றார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget