சாதனை படைக்க தவறிய இந்திய அணி! கண்ணீர் விட்ட வீரர்கள்!

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தனது முதலாவது ஆட்டத்தில், தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் தர வரிசையில் 97-வது இடத்தில் உள்ள இந்திய அணி, தனது கடைசி லீக்கில் 113-ம் நிலையில் உள்ள பக்ரைனுடன் இன்று சார்ஜாவில் மோதியது. முதல் பகுதி ஆட்டத்தில் இரு அணியும் சிறப்பாக விளையாடி கோல் எதுவுமின்றி முடித்தது. பின்னர் தொடங்கிய இரண்டாவது பகுதி நேர இறுதி 91வது நிமிடத்தில் பக்ரைன் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தது. இதன் மூலம் இந்தியாவை ஒன்றுக்கு ப்ஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பக்ரை வெற்றிபெற்றது.

 ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இப்போட்டி ஆரம்பிக்கும் முன் 2வது இடத்தில் இருந்தது. இதில் தோல்வியுற்றதால் இறுதி இடமான 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget