லண்டனில் இருந்து இந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை அமல்படுத்தாமல் மத்திய அரசு சுற்றிவளைத்து ஏதேதோ அரசியல் செய்து வருகிறது. தேர்தலுக்கு சில நாட்கள் முன் அவரை இந்திய அழைத்து வந்து அதை சொல்லி வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஜய் மல்லையா பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு - மோடி அரசின் நாடகம்
வங்கி கடன் மோசடியில் சிக்கி, வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் பொருளாதார குற்றவாளி என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரும் மற்றொரு கோரிக்கை மீதான விசாரணை, பிப்ரவரி 5ம் தேதி தொடங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமைறைவு பொருளாதார மோசடியாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ், மல்லையாவை குற்றவாளி என அறிவித்து, அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment