காஷ்மீர்
மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் பல
ஆண்டுகளாக அமலில் உள்ளது. அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில்
அமல்படுத்தப்படும் இந்த சட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் எந்த முன்
அனுமதியும் இன்றி யாரையும் கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ அதிகாரம் உள்ளது.
இதனால் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் எல்லை
பாதுகாப்பு படையினரின் அடக்குமுறைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு
வருகின்றனர்.
இந்த சட்டம் நாகாலாந்து மாநிலத்தின் மியான்மர்
எல்லைப்பகுதிகளில் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த சட்டத்தை
மாநிலம் முழுவதும் 6 மாதங்களில் விரிவுபடுத்துவதாக மத்திய உள்துறை
அமைச்சகம் அறிவித்துள்ளது.

Post a Comment