மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருந்த நேபாளி தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அப்பெண் குளிருக்காக புகை மூட்டியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு நேபாள ஊரக பகுதிகளில் நிலவி வருவதால் இச்சம்பவம் நிகழ்ந்திரு்கின்றது. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வளர்ந்து வரும் இக்காலத்தில், மூட நம்பிக்கைகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் வருத்தமளிப்பதாக உள்ளது.

Post a Comment