சென்னை, கிண்டியில் நேற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் போகி பண்டிகையின் போது காற்று மாசுபாட்டை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் காற்று மாசுபாட்டை குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் சம்பு கலோரிகர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போகிப் பண்டிகையின் போது அதிகபடியான பொதுமக்கள் பிளாஸ்டிக் டயர், டியூப் போன்றவகளை தீயில் கொளுத்தாமல், பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும். போகியின் போது காற்று மாசுபாட்டை எப்படி குறைப்பது என்பதை குறித்து கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல் துறையோடு சேர்ந்து காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்பாக 30 ரோந்து வாகனங்கள் மூலம் சென்னை முழுவதும் இரவு ரோந்துக்கு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரோந்து பணியாது டயர் போன்றவற்றை கொளுத்துவதை தடுக்கவும், அதைனை செய்வோர் மீது தண்டனை அளிக்கவும் அனுப்பி தயார் நிலையில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டு கொளுத்தினால் மிகவும் தண்டனைக்குரிய செயலாகும்.
அவ்வாறு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை தீயில் கொளுத்தி போகியை கொண்டாடுபவர்களின் மீது, பொதுமக்கள் தொந்தரவு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கப்படும்.
கடந்த முறை தீபாவளியின் போது விதி முறைகளை மீறி பட்டாசு வெடித்தார்கள். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது போல் தடை செய்யப்பட்ட பொருட்களை தீயில் கொளுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஆகையால் காற்று மாசு இல்லாமல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment