மதுரையில் வீட்டு வாடகை தராததால் வீட்டில் குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு கரண்ட் ஷாக் கொடுத்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார் இவர் வீட்டு வாடகையை சரிவர கொடுக்கவில்லை என்பதற்காக இவரது 7வயது மகளுக்கு வீட்டு உரிமையாளரான மணிவண்ணன் மற்றும் அவரது மகன் சந்தோஷ் ராஜ் ஆகியோர் கரண்ட் ஷாக் கொடுத்ததாக கூறப்படுகிறது, இதை தொடர்ந்து படுகாயமடைந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கொடூர செயல் செய்த வீட்டு உரிமையாளர் மணிவண்ணன் மற்றும் அவரது மகன் சந்தோஷ் ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

Post a Comment