திண்டுக்கல், ஆயக்குடியைச் சேர்ந்தவர் முருகானந்தம் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் அங்கு வசித்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள கிராமத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் பரந்தாமனுக்கும், முருகானந்தத்திற்கும் முன் பகை இருந்துள்ளது.
இந்நிலையில் முருகானந்தத்தின் இரு மகன்களும் பரந்தாமன் வீட்டின் வாசல் அருகே விளையாடி உள்ளனர். முன் பகை காரணமாக ஆத்திரத்தில் பரந்தாமன், வீட்டின் மாடியிலிருந்து இரு குழந்தைகள் மீதும் ஆசிட் பாட்டிலை வீசியதாக தெரிகிறது. வெளியே வந்து பார்த்த இரு குழந்தைகளின் பெற்றோர் வேதனையுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரில் காவதுறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment