பாஜகவுக்கு ஜால்ரா போடுவதில் தினமலரிடம் போட்டி போடும் நியூஸ் ஜே


மதுரை ரோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டர், பேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தற்போது உலக அளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக ஐடி விங்க் களமிறங்கியுள்ளது. ட்விட்டரில் பாலோயர் இல்லாத, யாரையும் பாலோ செய்யாத, புரொபைக் பிக்சர் இல்லாத போலி ஐடிக்களை உருவாக்கி மோடி வரவேற்பதாக ஒரு ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய முயற்சித்து வருகிறது பாஜக ஐடி விங்க். இந்த அனைத்து ஐடிக்களும் இந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல்.

பாஜகவின் இந்த ட்விட்டர் மோசடியை தெரிந்தும், தினமலர் வழக்கம் போல், மோடியை தமிழகம் சமூக வலைதளங்களில் வரவேற்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. தினமலரின் இந்த செய்தியில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால், அண்மையில் தொடங்கப்பட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜேவும் மோடியை சமூக வலைதளங்களில் தமிழர்கள் வரவேற்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பாஜகவுக்கு ஜால்ரா போடுவதில் தினமலரிடம் நியூஸ் ஜே போட்டியிடுவது தெரிகிறது. இது போன்ற ஒருபொய்யான செய்தியை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு நியூஸ் ஜே ஏன் தள்ளப்பட்டது என்ற கேள்வி இங்கு எழுகிறது. பல்வேறு விவகாரங்களில் சிக்கி இருக்கும் அதிமுக தலைவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள இதனை செய்கிறார்களா? அல்லது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget