விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது. கத்தாரிடம் ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வியை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் விரக்தியால் காலி தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை கத்தார் வீரர்கள் மீது வீசியுள்ளனர். இதனைத்தொடர்ந்து விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கத்தார் அணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
வெற்றிபெற்ற கத்தார் அணி, நாளை மறுநாள் ஆசியக் கால்பந்து இறுதி போட்டியில் ஜப்பான் அணியை எதிர்க்கொள்ள உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

Post a Comment