கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடனே, விவசாயிகள் பயிர் கடங்கள் தள்ளுபடி செய்துள்ளோம். அதை போலவே வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செய்த தவறுகளை நாங்கள் நிச்சயம் சரிசெய்வோம்.
இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நிச்சயம் உருவாக்கி தருவதாக தெரிவித்தார். ஆனால் அவர் இன்று வரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி பொய் பேசியே வீணடித்து விட்டார்.
என்று ராகுல் காந்தி பேசினார்.

Post a Comment