மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்ட ஆட்சியராக அனுக்ரா என்பவர் அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில் அவர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பணி நிமித்தமாக வெளியே செல்ல முயன்றபோது வெளியே காத்திருந்த விவசாயி ஒருவர் திடீரென அனுக்ராவின் காலில் விழுந்தார். அவரிடம் காரணம் கேட்டபோது தங்கள் கிராமத்தில் ட்ரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், விவசாயியின் கோரிக்கையை ஏற்று அவரது கிராமத்தில் ட்ரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளது.

Post a Comment