ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற இந்திய பேட்ஸ்மேன்கள் போராடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி இன்று சிட்னி நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும், நடுவரிசையில் இறங்கிய உஸ்மான் கவாஜா, சான் மார்ஷ், ஹான்ஸ்கோம்ப் ஆகியோர் அரை சதம் விளாசினர். அடுத்து விளையாடிய ஆல்ரவுண்டர் ஸ்டோனிஸ் அதிரடியாக ஆடி 47 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
289 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ராயுடுவும் டக் அவுட்டாகி வெளியேற ரோகித், ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் தோனி நிதானமாக ஆடி ரன்களை உயர்த்தினர். தோனி 51 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ரோகித் ஷர்மா, சிறப்பாக விளையாடி தனது 22 வது சதத்தை பூர்த்தி செய்தார்.

Post a Comment