காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியில் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 வயது சிறுமி கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார். இதனையடுத்து ஹரிணியின்
பெற்றோர் வெங்கடேஷன், காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் அணைக்கட்டு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொல்கத்தாவில்
ஹரிணி இருப்பதாக வந்த தகவலையடுத்து வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் அங்கு
விரைந்தனர்.
இந்நிலையில் சிறுமி காணாமல் போன அன்று
கிடைத்த சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இளைஞர் ஒருவர்
நடந்து கொள்வது பதிவாகி இருந்ததை கண்ட காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
திருப்போரூரில் உள்ள ஒரு வீட்டில் ஹரிணி இருப்பதாக கிடைத்த
தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். சிறுமியை
மீட்ட அவர்கள், அங்க அடையாளங்களை உறுதிபடுத்திய பின்னர் பெற்றோரிடம்
ஒப்படைத்தனர். அதன்பின் காவல்துறையினர் இந்த வழக்கு சம்மந்தமாக 2 பேரை கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி ஹரிணியை 3 மாதங்களாக
வளர்த்தவர்கள் அவளுக்கு மொட்டை அடித்து காது குத்தி உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
3 மாதங்களுக்குப் பிறகு இன்று மீட்கப்பட்ட
ஹரிணியை கண்ட பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டு அவளை அணைத்து அழுதனர்.
அதன்பின் சிறுமியை கண்டுபிடிக்க உதவிய காவல்துறையினருக்கும், தன்னார்வ
தொண்டு நிறுவனங்களுக்கும், மீடியாக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Post a Comment