அண்மை காலமாக ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் நடிகர் பிரகாஷ்ராஜ், அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை என கூறிவந்தார். இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய தொடக்கம் தொடங்கிவிட்டது என்றும், அதிக பொறுப்புகள் வந்துள்ளதால் அனைவரது ஆதரவுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment