மோடியின் பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரிப்பு - போர்ப்ஸ் பத்திரிகை

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் ஊழல் அதிகரித்திருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊழலை ஒழிப்பேன் என சத்தியம் செய்து வந்த மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ரபேல் விமான முறைகேடு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, ட்ரான்பரன்சி இண்டெர்னேஷனல் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையில், ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 78வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Country
Corruption
Rank 2010
Corruption
Rank 2015
Corruption 
Rank 2016
Corruption Rank 2017
Corruption Rank 2018
India
87
76
79
81
78/175
Philippines
134
95/168
101/168
111/180
99/175
Pakistan
143/168
117/168
116/168
117
117/175
Metric20142017
Indians Thriving14%3%
Unemployment rate3.53%4.80*
Monthly Wages for Low-Skilled Workers13300INR10300 INR
Living Wage Family17300INR17400INR
Per Capita GDP$1647$1842**

இதன் மூலம் 2015ம் ஆண்டை விட 2018ம் ஆண்டில் இந்தியாவில் ஊழல் பெருகி இருப்பதை காட்டுவதாகவும், ஊழலை ஒழிப்பதாக கூறும் மோடியின் அரசு, பணக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்து ஏழைகளை துன்புறுத்தியதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து மகிழ்ச்சியாக வாழும் மக்களின் சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget