சமூக நீதியை சீரழிக்கும் இட ஒதுக்கீடுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

இந்தியாவில் பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள் முன்னேற்றமடையும் வகையில், சாதி அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நேற்று குடியரசு சமூக நீதியை சீரழிக்கும் இட ஒதுக்கீடுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். 

இந்த மசோதாவின் படி ரூ.8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் பெறுபவர்கள், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், ஆயிரம் சதுர அடிக்கு குறைவான சொந்த வீடு வைத்திருப்பவர்கள் இடஒதுக்கீடு பெறலாம். அதே போல், நகராட்சியில் 900 சதுர அடிக்குள் வீட்டு மனை வைத்திருப்பவர்கள், வரையறுக்கப்படாத பகுதிகளில் ஆயிரத்து 800 சதுர அடிக்கும் குறைவான வீட்டு மனை வைத்திருப்பவர்களும் இடஒதுக்கீடு பெற முடியும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் இதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றும் வகையில், அதன் கூட்டத்தொடர் காலம் புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget