ஊழல் இல்லையா? 2019ம் ஆண்டை பொய்யுடன் தொடங்கிய பிரதமர் மோடி!


டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.கவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது அரசின் செயல் பாடுகளை அவர் எடுத்துரைத்தார். 

அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தேசிய கட்டமைப்பில் பங்காற்ற விரும்புகிறார்கள் என தெரிவித்த மோடி, தங்கள் வரிப்பணம் உண்மையாகவும், வீரியமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்றார். எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு அரசால் இயங்க முடியும் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்திருக்கிறது என தெரிவித்த அவர், தங்கள் மீது தற்போது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்றார். ஊழல் விவகாரத்தில் தவறிழைத்தவர்களை விடப்போவதில்லை என்றும், ஊழலுக்கு எதிராக தங்கள் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், பெரிய பனிப்பாறையின் ஒரு முனை போன்றதுதான் என்றும் கூறினார். இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஊழல் தொடர்பாக தவறிழைத்த ஒருவரையும் விடமாட்டேன் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஆசிரியர் பார்வை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், தற்போது ரபேல் போர் விமான ஊழல் பூதாகரமாகி 2 நாடாளுமன்ற தொடர்களில் விவாதப்பொருளாகியுள்ளது. இதற்கு முன்னதாக நிரவ் மோடி வங்கி மோசடி ஊழல், பிட்காயின் ஊழல், நிலக்கரி ஊழல்,  ஜெய்ஷா ஊழல், GSPC ஊழல், நில ஊழல் போன்றவை பரவலாக பேசப்பட்டு வந்தன. 

இந்நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டின் மீது மேலும் எண்ணெய் ஊற்றுவது போல், கடந்த 2018 செப்டம்பரில் புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டது. அந்த இணையதளத்தின் பெயர் corruptmodi ஆகும். http://corruptmodi.com என்ற இந்த தளத்திற்கு சென்றால், பாஜகவின் மத்திய, மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்ட ஒட்டு மொத்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் A to Z வரை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த புகார்களில் பல, முன்னணி இந்திய ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகள் தான்.

இவற்றின் பல்வேறு ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த தருவயில் பிரதமர் மோடி தங்கள் மீது ஊழல் குற்றாச்சாட்டுகளே இல்லை என கூறி இருப்பது 2019ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யாக பார்க்கப்படுகிறது. இதை நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வழிமொழிந்துள்ளார்.

இதை வாசிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரலாம். ஊழல் வழக்குகள் தானே உள்ளது. நிரூபிக்கப்பட்டதா என்று. சற்று 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் திமுக முன்னாள் அமைச்சர் அ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மீது 2ஜி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் அதிமுகவும் அதை வைத்து பிரச்சாரம் செய்தன. இதனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்று பாஜக ஆட்சியமைத்தது. 2ஜி வழக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ விசாரித்தாலும், ஊழல் நடந்ததற்காக ஆதாரத்தை காட்ட முடியவில்லை. இதனால் இருவரும் நிரபராதிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆக, பொய்யான ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தி ஆட்சிக்கு வந்த மோடி தங்கள் அரசின் மீதான ஊழல் புகார்களால் ஆட்சி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இந்த ஆண்டின் இமாலய பொய் ஒன்றை கூறி இருக்கிறார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget