பெல்ஜியம் கடலில் விழுந்த 270 கண்டெய்னர்கள்

பெல்ஜியத்தில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில் சுமார் 270 கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன.

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் இருந்து   கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல், கடந்த 3 ஆம் தேதி வீசிய புயலில் சிக்கியது. இதனால், நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கப்பலில் இருந்த சுமார் 270 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. அவற்றில் 3 கண்டெய்னர்களில் ரசாயன நச்சுப்பொருட்கள் இருந்ததால், கடலில் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல கண்டெய்னர்களில் வேதியியல் பொருளான பெராக்சைட் இருந்ததும் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடற்படையினர், கடலில் விழுந்த கண்டெய்னர்களை தேடும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் 5 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதிகள் பாதிக்கப்பட்டு, பேராபத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget