இஸ்லாமியர்களே காப்பாற்றுங்கள்... மசூதியை நோக்கி திரண்டு வந்த அருந்ததியர்கள்!



கோவை உக்கடம் பகுதியில் கெம்பட்டி காலனி, மற்றும் CMC காலனி, கீரைக்கார வீதி, ராமர் கோவில் வீதி உட்பட சுமார் (3000) மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது, மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், அதற்குத் தேவையான சாலை விரிவாக்கத்திற்காக ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
கடந்த 1ம் தேதி திடீரென 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அருந்ததியின  மக்கள் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து அங்கே 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களை வீடுகளைக் காலி செய்யச் மிரட்டியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த அருந்ததியர்கள் தங்கள் அனைவருக்கும் மாற்றுக் குடியிருப்பு ஏற்பாடு செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர், சுமார் 3,000 குடும்பத்தினர் வசித்து வந்த சூழ்நிலையில் 1,500 வீடுகளை மட்டுமே அரசு தரப்பில் ஒதுக்க முடியும் என்று அதிகாரிகள் சொன்னதால், ஆத்திரமடைந்த மக்கள் அனைவருக்கும் வீடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை எற்க மறுத்த கூறி காவல்துறையினர் அவர்களை சூழ்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனால் அச்சமடைந்த தலித் மக்கள் அனைவரும் உக்கடம் கோட்டை மேடை நோக்கி கடந்த 1ம் தேதி ஜும்மா பள்ளிவாசலை நோக்கி முஸ்லிம்களே எங்களைக் காப்பாற்றுங்கள் என கோசமிட்டபடி ஓடிவந்தனர்.


தங்களுக்கான நியாயத்தை ஜமாத்தார்கள், பள்ளிவாசல் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்து, மக்களுக்கும் தெரியப்படுத்தி நியாயத்தைப் பெற்றுக் கொள்கிறோம் என்று கோசமிட்டவாறே கோட்டை மேட்டுக்குள் நுழைந்து பள்ளிவாசல் முன்பு திரண்டு வந்து நின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று (3-2-19) இரவு 7 மணியளவில் இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் கலந்துகொண்ட ஊர்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட SDPI மாவட்ட நிர்வாகிகள் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.







இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், இதே பகுதியில் தான் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் வீடும் உள்ளது. 1997 கோவை கலவரத்தில் இந்த மக்களை தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை செய்ய காவி சக்திகள் பயன்படுத்திக்கொண்டன. மக்கள் உதவி கேட்டு சென்ற இந்த ஜும்மா பள்ளிவாசலில் தான் 1997 கோவை கலவரத்தில் இறந்த 17 பேரின் உடல்களும் வைக்கப்பட்டிருந்தன. அருந்ததியின, தலித் மக்களை கலவரம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வலதுசாரி சக்திகள், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அம்போ என விட்டுச்செல்கின்றன என்பதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

பின் குறிப்பு: 1500 பேரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த சம்பவம் குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

எம்மதமானாலும் மனிதளை மனிதனாக பார்க்கும் மன பக்குவம் அனைவருக்கும் வர வேண்டும்
இல்லாதோருக்கு இருப்பவர் கொடுத்து உதவுவதே மனிதரில் சிறந்த மனித நேயம்

Sdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள் சந்திக்க சென்றது பள்ளிவாசல் நிர்வாகிகளை தேடி தகவல் அறிந்த ஜமாத்நிர்வாகிகள், மனிதநேய ஜனநாயக கட்சிமாவட்ட நிர்வாகிகள் திமுக பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் முதல் கட்டமாக காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

SDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள நீங்கள், RSSஐ தூற்றுவதில் என்ன பெறுமையை கொள்ள வேண்டும்.

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget