உச்சநீதிமன்றமாவது உயர்நீதிமன்றமாவது! ஆனந்த் தெல்தும்டேவை கைது செய்த போலீசார்

மகாராஷ்ட்ரா மாநிலம், பீமா கோரேகான் பகுதியில் மஹர் என்ற தலித் சமுதாயத்தினர் நடத்திய நிகழ்வு ஒன்றில் பெரும் கலவரம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இடதுசாரி, அம்பேத்கரிய சிந்தனையாளர்களான அருண் ஃபெரைரா, வென்னான் கோன்சல்வ்ஸ், சுதா பரத்வாஜ், பி.வரவர ராவ், கௌதம் நவ்லகா ஆகியோரை மகாராஷ்டிரா போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்டோருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து ஆனந்த் தெல்தும்டே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நான்கு வாரத்துக்கு அவரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டது. அதன்படி, பிப்ரவரி 14-ம் தேதிவரை அவரை கைது செய்ய  உள்ளது. இந்த நிலையில், அவரது முன் ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் அடிப்படையில் இன்று அதிகாலையில், மும்பை உள்நாட்டு விமானநிலையத்தில் புனே காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். 

ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டதற்கு கண்டனங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆனந்த் தெல்தும்டேவின் கைதைக் கண்டித்து இணையத்தில் #StandWithAnand என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
கடந்த 4.5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்ற பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பின்னணியில் இந்துத்துவ தீவிரவாதிகள் இருப்பதும் விசாரணைகளில் அம்பலமாகி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக எந்த கருத்து தெரிவித்தாலும் கைது செய்யப்படும் நடவடிக்கையை கண்டு வருகிறோம். தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பிய சோபியா தொடங்கி, மாணவி வளர்மதி, இயக்குநர் திவ்ய பாரதி, முகிலன், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலரும் இதனால் பாதிக்கப்பட்டனர்.

ஜனநாயக நாடு என சொல்லப்படும் இந்தியாவில் அதனை ஆளும் பாஜக் அரசே கருத்துரிமைக்கு எதிரான இந்த அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அண்மையில் குடியரசு தினத்தை கொண்டாடிய இந்தியாவில் குடியரசு நிலை இன்னும் நிலவுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

-நியூசு செய்திக்குழு

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget