ஆதார் கார்டில் உங்கள் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா?

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் முகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை. அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் சூழ்நிலையே இங்கு உருவாகி இருந்தது.

ஆதார் அப்டேட் படிவத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். https://uidai.gov.in/images/UpdateRequestFormV2.pdfஇந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கரெக்ஷன் படிவத்தைச் சரியாக நிரப்பி UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுதி அனுப்பினால் இரண்டு வாரங்களுக்குள் உங்களின் புதிய ஆதார் கார்டு வீடு வந்து சேரும்.

அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் சென்று, உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற நேரடியாகப் புகார் அளிக்கலாம். இரண்டு வாரங்களுக்குள் புகைப்படம் மாற்றப்பட்ட புது ஆதார் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்து புதிய கார்டு வழங்குவதற்கு ரூ.15 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget