ராகுல் காந்தியா? ராஜீவ் காந்தியா? வடிவேலு போல் கன்பியூஸ் ஆன அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்துநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார், அப்போது அவர், ஸ்டாலினுக்கு உடல்நலக் கோளாறு காரணமாக அலைய முடியாததால், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். திமுகவில் உள்ள வயதானவர்கள் அதிமுகவில் இணைய வேண்டும் என அவர் கேட்டுகொண்டார். பேச்சின் போது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டது ராஜிவ் காந்தியா? ராகுல் காந்தியா? என குழப்பமடைந்த திண்டுக்கல் சீனிவாசன் அருகில் நின்ற அதிகாரியிடம் அதுபற்றி கேட்டுவிட்டு பேசினார். அதே போல் உச்சநீதிமன்ற நீதிபதி என கூறி விட்டு பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதி என அமைச்சர் மாற்றி பேசினார். அண்மையில் நிதியமைச்சர் பியுஷ் கோயல் என்பதற்கு பதிலாக வாஜ்பாய் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது சீனிவாசன், விஞ்ஞானிகளை வைத்து சின்னத்தம்பி யானையை கும்கியாக்க முயற்சிக்கிறோம், சோழப்பயிர்களை சாப்பிட்டு யானை ருசி கண்டுவிட்டது என்ற கருத்துக்களை தெரிவித்து மீம் கிரியேட்டர்களின் கண்டண்ட் மன்னனாக மாறி வருகிறார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget