ஒரு பக்கம் சிபிஐ கைது... மறுபக்கம் புதிய இயக்குநர் பதவியேற்பு

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையிலான மோதலை தொடர்ந்து இருவருக்கும் மத்திய அரசு கட்டாய விடுப்பு வழங்கியது. இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என உத்தரவிட்டது. 

ஆனால், அலோக் வர்மாவைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரிக்க இயலாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ஏ.கே.சிக்ரி, ரமணா ஆகியோர் அறிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவின் சின்ஹா ஆகியோர் கொண்ட புதிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

 அப்போது, சிபிஐ இயக்குநர் பதவி என்பது முக்கியமானது என்றும், நீண்ட நாட்களுக்கு இடைக்கால இயக்குநரை நியமிப்பது சரியாகாது எனவும் கூறி ஆதலால், உடனடியாக முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, பிரதமர் மோடியின் இல்லத்தில் சிபிஐக்கு புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாரஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி சிபிஐ புதிய இயக்குநராக, மத்திய பிரதேச காவல்துறை இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து ரிஷிகுமார் சுக்லா இன்று புதிய இயக்குநராக பதவியேற்றுக்கொண்டார். அவர் அடுத்த 2 ஆண்டுகள் சிபிஐ இயக்குநராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் சிபிஐ அதிகாரிகள் கைதான நிலையில் புதிய இயக்குநர் ரிஷி குமார் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget