கம்மா நாயுடு சர்ச்சை - தனமணி மதிமுகவிலிருந்து நீக்கம்

கடந்த வாரம் கோவையில் கம்மா நாயுடு எழுச்சிப் பேரவை மாநாட்டில் மதிமுகவை சேர்ந்த ஊடக விவாதக்குழு உறுப்பினர் தனமணி வெங்கடபதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நம்மை வந்தேறி என்று சொல்பவர்கள்தான் வந்தேறிகள்” என்று தொடங்கி தமிழர்களைக் குறிப்பிட்டு அவதூறு பேசியதாக புகார்கள் கிளம்பின. இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில், மதிமுக மீதும், திராவிட கட்சிகள், இயக்கங்கள் மீதும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 1ம் தேதி மதிமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மதிமுகவின் ஊடக விவாதக்குழு உறுப்பினரும், கழகப் பேச்சாளருமான கோவை திருமதி தனமணி வெங்கடபதி கழகத்தின் கண்ணியத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாகவும், அவரது கணவர் வெங்கடபதி, கோவை மாநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ஸ்ரீமான் சுந்தரம் ஆகியோரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget